நான் கடிகாரம்

நேரமா பார்க்கின்றாய்
இதோ யாருக்கும்
உதவா உனது இந்த
நொடிகள் செத்துக்
கொண்டிருக்கின்றன.

எத்தனை முறை பார்ப்பாய்
நேரத்தை - நீ பார்க்க
உனக்காக பல
விடியல் காத்துக்
கொண்டிருக்கின்றன.
செத்த நிமிடங்களை
கணக்கில் கொள்ளாமல்
சாகாமல் இருக்கும் உன் விடியலுக்காக
வெற்றிக்காக
உலகை எதிர் நோக்கி
ஓடு.

மூச்சுள்ளமட்டும் முள்ளோடுதான்
ஓடுகிறேன் - முடியவில்லை
என சொன்னதில்லை
நான்...

உயிர்த்தெழா நிமிடங்கள்
உன் உறுசக்தியாலும்
நேர் உழைப்பிலும்
நிச்சயம் எழும்.
காலங்கள்
திரும்பாதவை தான்
ஆனால் நல்ல காலம் நிச்சயம்
திரும்பும்.
திரும்பும் - நீ சோம்பலுக்கு
திரும்பாவிடில்......

எழுதியவர் : மு.சுந்தரபாண்டியன் (6-Apr-15, 12:39 pm)
Tanglish : naan kadikaaram
பார்வை : 115

மேலே