போலி உலகமடா …………
வாழ்க வாழ்க என்ற கோஷம் ஒரு புறம்
ஒழிக ஒழிக என்ற கோஷம் ஒரு புறம்
செவிகளின் அனுமதியின்றி நுழைந்தது
செவ்வாய்கிழமையன்று என் வீட்டில் நுழைந்தவர்கள் போல
கர்மம் என்னைத் துரத்தியதா இல்லை
காமம் அவர்களை அழைத்ததோ தெரியவில்லை
விழித்தெளிந்தேன் என் கற்பு என்னிடமில்லை
விடுமுறை என்பதால் என் வீட்டில் யாருமில்லை
தகுதியற்றவளாய் ஆனேன் அன்றிலிருந்து
அழுதுக் கொண்டிருந்தேன் என் அறையில் தனியாக
அலங்கோலமாகப் போனேன் என் வாழ்நாள் முழுமையாக
கதறி அழுதாள் என் தாய் விபரம் அறிந்து
குற்றப்பத்திக்கைச் செய்தார் என் தந்தை வறுமை அறிந்து
பணம் பத்தும் செய்யும் என அறிந்தேன்
பள்ளியறைக்கு நான் அழைத்தேன் என்று தீர்ப்பானதும்
விஷம் குடித்து இறக்க துணிந்தோம் குடும்பத்தோடு
விண்ணிற்கு போவேன் எண்ணினேன் அங்கும்
தகுதியற்றவளாய் ஆனேன் இன்று
தவறு செய்தால்
தனி மரியாதை
பணம் இருந்தால்
பாராட்டும் பாதுகாப்பும்
சுய ஒழுக்கம்
இல்லாத ஆணுக்கு
சுற்றெங்கும் வரவேற்பு
சுயநலமான சமுதாயத்தில்
சுடிதார் அணிந்தாலும்
கவர்ச்சியென்று
கதர் வேட்டி
போராட்டம் செய்யும்
போலி உலகமடா
நம் பாரத நாடு ………..!