நினைவுகள்

சில கதைகள்
சில கவிதைகள்
சில பாடல்கள்
உன் நினைவுகள் தான்
படிக்கும் பொழுதோ பார்க்கும் பொழுதோ
குதிரையில் ஏறி அமர்ந்த வீரன் போலே
வேகமாக பயணிக்கின்றது
இலக்கும் இல்லை
வேகத்தடையும் இல்லை
பயணம் ஒன்றே குறிக்கோள்
சில சந்தர்ப்பங்களில்
திரும்பி பார்க்க தோன்றும் பொழுது
இது போல் சிறு சிறு துளிகள்
எழுத்தின் வாயில் வழியாக…

எழுதியவர் : (7-Apr-15, 1:09 pm)
சேர்த்தது : தர்வேழ் மைதீன்
Tanglish : ninaivukal
பார்வை : 75

மேலே