சாலையின் ஏக்கம்

பண்டிகைகள் வந்தாலென்ன
திருமணங்கள் வந்தாலென்ன
விசேடங்கள் வந்தாலென்ன
எனக்கு ஒன்றும் இல்லை
தேர்தல் வரவேண்டும்
ஆடை கிடைக்க
சந்தோஷம் மலர

வெயிலை கண்டு பயமில்லை
மழையை கண்டால் மட்டுமே
கிழிந்த ஆடையை கொண்டு
என் செய்வேன்
புண்ணாகி போகிறதே
என் மேனி

கிழிசலை கண்டு
கரிசனை காட்ட யாருமில்லை
மனசாட்சிக்கு இடமில்லை
தேர்தலே இதற்கு சாட்சி

சாலை நான் படும்பாடு
பெரும்பாடு
மாலை எனக்கு வேண்டாம்
நாளை நடை போட
ஆடை ஒன்று போதும்

புது ஆடை கேட்கவில்லை
ஓட்டைகள் இல்லாத
பழைய ஆடைப்போதும்
சேரும் சகதியுமான
என் கதி
நிவர்த்திக்கப்பட வேண்டும்
வாழ்வில்
ஒளியேற்றப்பட வேண்டும்..

-வசீம் அக்ரம்-

எழுதியவர் : வசீம் அக்ரம் (7-Apr-15, 2:46 pm)
Tanglish : salaiyin aekkam
பார்வை : 108

மேலே