தலைப்பிலா கவிதை

உண்மைக்கு இங்கே மதிப்பில்லை
பொய்மைக்கு மதிப்போ நிகரில்லை
வாய்மையும் வளமையும்
வறண்டு கிடக்கிறது.
களவும் கலவியும்
நிரம்பி நிற்கின்றது..
வாய்மையின் வீட்டு அடுப்பில்
பூனை உறங்குகிறது..
பொய்மையின் வீட்டு அடுப்பே
பொங்கி வழிகிறது..
ஊடகமோ உண்மையில்லை
செய்தியோ சரியில்லை
அவன் ஓடிப்போனாள்
இவள் ஓடிப்போனாள்
செய்தி தலைப்பானாது..
தங்கப்பதக்கமோ உபரியானாது..
கற்புக்கிங்கே காவலில்லை
கவர்ச்சிக்கோ எல்லையில்லை.
காமத்துக்கு கட்டுப்பாடில்லை..
படிப்புக்கோ பஞ்சமில்லை
கல்வியோ தரமில்லை..
கல்லூரியோ அளவில்லை
பட்டதாரிகளோ எண்ணிலடங்கவில்லை..
வேலைக்கோ வாய்ப்பில்லை..
மருந்துக்கோ காசில்லை-அரசு
மருந்துத்துவமனையோ சரியில்லை..
நோய்க்கோ அளவுகோலில்லை..
நாளொரு நோய்!பொழுதொரு சாவு!
அரசின் கல்விக்கூடம் தனியாராச்சு,
தனியாரின் மதுக்கூடம் அரசுக்காச்சு
கொட்டுது காசு!!!
எத்திசை வந்தது இத்துன்பம்
வேலைக்கோ வேண்டப்படுதம்மா இலஞ்சம்!
என்று தணியுமிந்த சாபம்!
என்று முடியுமிந்த சோகம்!
அதுவரை நாறுமிந்த நரகம்!!

எழுதியவர் : யசோக்குமார் (10-Apr-15, 4:32 pm)
பார்வை : 110

மேலே