வெகுளி கிராமம்

கள்ளிக்காட்டு மண்ணுல
கழுத மேயரதுல ஆரம்பிச்சி,
கருப்பாயி வக்கிர மீன் கொழம்புக்கும்,
கனகாத்தா விக்கிற கனகாம்பரத்துக்கும்
தெரியாது

என் கள்ளிகாட்டு இதிகாசத்துக்கு
அவங்க தான் கதை நாயகர்ள்ன்னு...

சொக்கி போன நினைப்புல
எக்கி வந்த வரிகள் இதோ...

சூரியன பாத்து
மணி சொல்லும் மணியன்னே..

நிலா சோறு ஊட்டும்
நீலாவதி அக்கா...

சத்துருண்டை கொடுக்கும் பால்வாடி
சத்தமே இல்லாம சாமான அமுக்கிர
அங்கன்வாடி..

ஊரோர ஆலமரம்,
ஒதுக்குபுறமா சிவன் கோயில்..

எல்லாம் இன்னும் இருக்கு..
ஆனா
ஏறு பூட்டி
நாத்து நட
விளை நிலம் கூட இல்லை
எல்லாம் விலை நிலமா போச்சு..

வெகுளி கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை
இந்த விந்தை உலகம்...

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (10-Apr-15, 4:36 pm)
Tanglish : veguli giramam
பார்வை : 79

மேலே