கேள்விகள் எரிகின்றன
கேள்விகள் எரிகின்றன
=====================================================ருத்ரா
கடவுளை நினைப்பவனே மனிதன்.
கடவுள் இஸ் ஈக்குவல் டு மனிதன்
என்று
அத்வதம் சொன்ன பிறகு
மனிதனை நினைப்பவனே கடவுள்.
முன்னவன் ஆத்திகன் என்றும்
பின்னவன் நாத்திகன் என்றும்
பாஷ்யங்கள்
"மயிர் பிளக்கும்" வாதங்களில்
நம் மனம் பிளக்கின்றன.
பாதாதி கேசம் பிரம்மன் தான் என்று
சொல்லிய பிறகு
காலில் சூத்திரன் என்றும்
தலையில் பிரம்மன் என்றும்
அது என்ன "புதிய வர்ண மெட்டில்"
இங்கு சங்கீதம்?
எம்மதமும் சம்மதம் என்பதே எங்கள் மதம்
என்று சொல்லிய பிறகு
இந்திய மண்ணில் மற்ற மதங்களின்
காலடிகளை அழிப்பதற்காகவா
"காலடியில்" ஒரு அவதாரம்?
கொலம்பஸ்
கடல் அலைகளோடு போராடி
மரணத்தையும்
மடி மீது ஏந்தி கப்பல் ஓட்டி
இந்தியாவை தேடியது
மதங்களை தாண்டிய அந்த
அந்த "பொதுமை ஒளிக்கு"த் தானே!
அந்த வெளிச்சத்தையே "போலியானது" என்று
அணைத்து இருட்டாக்க
அரசியல் சாசனத்தின் ஷரத்துக்குள்
"புற்று நோய்"க்கிருமிகளை
புகுத்துவது என்ன ஜனநாயக தத்துவம்?
கேள்விகள் எரிகின்றன!
நெய்க்குடங்களிலும்
பால்குடங்களிலும்
எரியும் வேள்விகள் அல்ல இவை!
=======================================================