கூந்தல்

நேர் வகிடு,
நெற்றி முன் தவழும் முடி,
இடம் வளமாடும்
ரெட்டை ஜடை,
கை கொண்டு நெய்யும்
கற்றை பின்னல்,
களைந்த முடி சேர்க்கும் கொண்டை,
பின்னலின் முடிவில் ரிப்பன்..
உங்களுக்கே உரிய அழகு.....

பறித்த பூக்களை தொடுத்து வைக்கும் போதும் ,
ஒற்றை பூவை ஓரமாய்
செருகும் போதும், இழந்த உயிரை பெற்றதாய் உணர்கின்றன
ஒவ்வொரு பூக்களும்......


காதணிகள் பெரிதில்லை காதோரம் முடி கோதும் அழகுக்கு முன்....
அடை மழை பெரிதில்லை, தலை துவட்டையில் தெரிக்கும் சாரலுக்கு முன்....
காரிருள் பெரிதில்லை,
இந்த கார்குழலின் நிறத்திற்கு முன்....

தலை விரித்தபடி வீதியில் நடக்கும்போது, வீசும் காற்றுக்கு விரும்பி அசையும்போது, விழுந்து எழுகிறது வீதியோர ஒவ்வொரு பார்வையும்...

அவசரமாய் மகளை பள்ளிக்கு அனுப்பும் அம்மாவிலிருந்து, அலுவலக பையில் சீப்பை எடுத்து செல்லும் இல்லத்தரசிகள் வரை, இந்த கூந்தளோடு போடும் சில சண்டைகள் இருந்தும்,

அம்மாவிலிருந்து மனைவி வரை,
தோழியில் இருந்து தொலைவில்
மறைந்த பெண் வரை,
இந்த கூந்தல் பெண்களின்
பேர் அழகே.....

இன்றோ...
காலத்தின் மாற்றங்களில் ,
சில கலாச்சார தோற்றங்களில் கண்ணாடிகளின் முன்பு உடைகின்றன ஒவ்வொரு மனங்களும் முடிகளின் ஒவ்வொரு உதிர்வுக்கும்......

உதிர்வு எண்ணி வருந்தும் கவலைகளின் வரிசையில் நீங்காத இடமாய் நிற்கிறது....

மருத்துவ படிப்புகளும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், வேகமாய் வளர்கிறது விடை தெரிந்து இருப்பதை காப்பாற்ற....


இச்செய்தி தெரிந்த இறைவனுக்கென்ன அப்படியொரு கரிசனம் ஆண்களின் மேல், இருபதிலேயே குறைத்துவிடுகிறான்
பாரத்தை அவர்கள் தலையிளிருந்துருந்து.....


திருமண மேடையில் அடிக்கடி நெற்றி மறைக்கும் மண ஆணுக்கு முன்,
ஜடை கொண்டு மறைந்த உங்கள் கூந்தல் சற்று ஆறுதல் அடையட்டும்....

சரித்திர கூந்தல்களை நினைக்கும்போதும்,
ஜன்னல் ஓரம் சுருட்டி வீசும்போதும், நிம்மதி அடையுங்கள் ஆண்கள், எங்களை நினைவு கூர்ந்து......

எழுதியவர் : sugan dhana (13-Apr-15, 5:14 pm)
Tanglish : koonthal
பார்வை : 2480

மேலே