கல்விக் களவாணிகள்

( என் மகனின் பொறியல் கல்விக்காக கல்லூரிக் கல்லூரியாய் ஏறியிறங்கிய அனுபவத்தால் எழுந்த உணர்ச்சிக் குமுறல்கள் )

கலைக்கட்டத் துவங்கிவிட்டது - 'சீசன்'
ஐபிஎல் சூதாட்டம்போல்..!
கல்லூரிக்கு கல்லூரி
கமிட்டி அமைத்துக்கொண்டு
கமிஷன் ஏஜென்ட்டுகளய்..!
மெரிட்டில் மார்க்கெடுத்தாலும்
பேரம் படியாவிட்டால்
மாணவனின் உயர்கல்வி மரணப்படுக்கையில்…!
மேனேஜ்மென்ட் கோட்டாவில் கொட்டிக்கொடுத்தால்
நுழைவுத்தேர்வு இல்லாமலேயே இடம்பெறலாம் வகுப்பறையில்…!

கணக்குப் பரீட்சையின் கேள்வித்தாள்களை
கல்வித்துறை மிகக் கடினமாக்குவதால்
சகட்டுமேனிக்கு எகிறிவிடுகிறது தனியார் கல்லூரிகளில்
பொறியியல் படிப்புகளின் கட்டணக்கொள்ளை..!

நம் பாவப்பட்ட இந்தியாவில்தான்
அரசியல்வாதிகளே கல்வி வியபாரிகளாய்…
கல்வி வியபாரிகளே அரசியல்வாதிகளாய்..!

வெட்கித் தலைகுனிய வேண்டியவர்களுக்கு
‘கவுரவ டாக்டர் பட்டம்’ !
கல்விக்கு விலை நிர்ணயிக்கும் வியபாரிக்கு
‘கல்வித்தந்தை’ என்னும் மகுடம் !

அவரவர் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களின்
பெயரால் புற்றீசல்களாய் பொறியல் கல்லூரிகள் !
அச்சடித்த அச்சாரங்கள்தான்
அவர்களின் உச்சப்பட்ச லட்சணம் !
இலட்சங்களை இறைக்காவிட்டால்
ஏழைகளின் இலட்சியக்கல்வி-கேள்விக்குறி..!

இலவசங்களுக்காக செலவிடும் இலக்கங்களை…
கருணைத்தொகையாக கல்விக்குச் செலவிட்டாலே
அனைவரும் அப்துல்கலாமாக ஆகாவிட்டாலும்
அவர் காணச்சொல்லும் கனவுகளாவது நிறைவேறும் !

பக்கத்திற்குப்பக்கம் பத்திரிகைகளில் விளம்பரம்..!
நிமிடத்திற்கு நிமிடம் தொலைக்காட்சியில் புகைப்படம் !
விற்காத சரக்கிற்குத்தானே விளம்பரம் தேவை..!
வற்றாத கல்விக்கு எதற்கடா விளம்பரம்..?

கண்ணகியின் கற்புக்கு இணையான கல்வி – அதை
காயடிக்கும் வேலையை செய்வதா பள்ளி..?

கூலித்தொழிலாளிக்கு - தம்பிள்ளைக்கு பீஸ் கட்டியே
பாதி கூன் விழுந்து விட்டது..!

அரசாங்கப்பள்ளிகளின் கல்வித்தரம் அதிகரித்திருந்தால்
தனியார்பள்ளிகளின் ஏதோச்சதிகாரம் முளையிலேயே
முறியடிக்கப்பட்டிருக்கும்..!
இப்போதோ கண்க்கெட்டப்பின்னாலே சூரிய நமஸ்க்காரம் !
அரசாங்கமே அதற்கு அங்கீகாரம் வழங்கியிருப்பாதல்
தான்தோன்றித்தனமாக தான்சொல்வதுதான்
சட்டமென்கிறது தனியார் கல்வி நிறுவனங்கள் !

மனிதன் ஜீவிக்கத்தேவை..
உண்ண – உணவு
உடுத்த – உடை
உறங்க – இடம்
கற்க – கல்வி
பிழைக்க – வேலை

கூலிவேலைசெய்து குடும்பத்தை ஓட்டும் தொழிலாளிகளே..!
அந்தக் கூலிக்கொடுக்கும் நிறுவனமே நம்குழந்தைகளின்
கல்விக்காக உதவாமல்ப்போனால் அவர்களும் கூலிகளே..!

மூளைக்கு வேலை கொடுக்கும் கல்வியை கசடற
கற்காமல் போனால், கூலி வேலையைத்தவிர
நம் குழந்தைகளுக்கென்ன கலெக்டர் வேலையா கிடைக்கும் ?

கல்வியை வியபார நோக்கோடுப் பார்க்கும்
கழுகுக்கண் கல்வித் தந்தைகளே…! கர்மவீரர்
காமராஜர் மட்டும் இன்று உயிரோடுயிருந்திருந்தால்
உங்களையெல்லாம் காளிக்கு காவு கொடுத்திருப்பார் !

அவசர ஊர்தி - உயிர் காக்க,
ஆரம்ப கல்வி - அறிவு வளர்க்க,
ஆரம்பமே ஆயிரக்கணக்கில் செலவானால்
பேரின்பமாய் வாழ்வதற்கு பெற்றோருக்கேது பேரமைதி..!

ஒன்றாம் வகுப்பு படிப்பவனின் முதுகிலே
ஒன்பது கிலோ புத்தகப்பை…!
பித்தப்பையே வெடிக்கும் அளவுக்கு
மூளையை கசக்கும் கல்விமுறை..!
ரத்தநாளங்களில் சடுகுடாடும் அச்சப்பாம்புகளால்
மொத்த நிம்மதியும் சைத்தான்களிடம் சிக்குண்டது..!

மாறவேண்டும் கல்விமுறை
மாற்ற வேண்டும் எளியமுறை
இனியும் தூங்க வேண்டாம் கல்வித்துறை
வாங்க வேண்டாம் மாணவர்களின் உயிரை !

விழித்துக் கொள்ளுங்கள் பெற்றோர்களே..!
வெகுமதி கொடுப்பதை நிறுத்துங்களேன்..!
கொடுப்பதை குறைத்துக்கொண்டால்
அனைத்துக் கல்லூரிகளும் உங்கள் பின்னால்..!

எழுதியவர் : இரா.மணிமாறன் (13-Apr-15, 4:00 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 118

மேலே