ச்சே புரிஞ்சுக்கவே முடியலியே

என்னடா ஹரி ? ஏன் சோகம் ? முகத்தில் ஒளியையே காணும் ?
ஒன்னும் இல்லைடா ! என் மனைவி ஊரில் இல்லை அது தான் !
ஊரில் இல்லையா ? அப்ப பிரகாசமா தானே இருக்கணும் என கலாய்த்தான் சுரேஷ் !!
உனக்கு கிண்டலா தான் இருக்கும்.! ஷாலினியை பத்தி தான் தெரியுமே ! அவ நில்லுன்னா நிக்கனும் ! உட்காரனும்னா உட்காரனும் ! ச்சே ! ஏன் தான் கல்யாணம் பண்ணிண்டேன்னு இருக்கு ! இவங்க கழுத்திலே தாலி ஏறும் போது குனிந்த தலை நிமிராம இருக்காங்க ! தாலி ஏறினவுடன் நம்பளை நிமித்திடறாங்க !
ஷாலினி அவங்க அம்மா வீட்டிற்க்கு போய் இருக்கா ! அவ வருவதற்குள் ஒரு பட்டியல் வேலையை சொல்லிட்டு போய் இருக்கா !முடிச்சு வைக்கலைன்னா அவ்வளவு தான் ! சிங்கம் போல கர்ஜிப்பா !
நான்மட்டும் எம தர்ம ராஜாவா இருந்தா இந்த எல்லா பெண்களையும் அலாக்கா தூக்கிட்டு போய் எம லோகத்தில் முதலில் விட்டு விடுவேன் திரும்பி கூட பார்க்காம ! அப்ப தான் கஷ்டம் புரியும் ! என அங்கலாய்த்தான் ஹரி !
ஷாலினி ஒரு வசதி வாய்ந்த குடும்பத்திலிருந்து வந்த பெண்.. சௌகர்யங்களுடன் செல்லமாய் வளர்ந்ததால் வேலை செய்வது என்பதை அறவே வெறுப்பவள். ஆனால் வேலை வாங்குவதில் கெட்டிக்காரி. ! அதிலும் கணவனை !
திருமணம் ஆன புதிதில் மனைவியை மனம் புண் படுத்த கூடாது என்கின்ற கோட்பாடில் மூஞ்சுறு போல் வளைந்து நெளிந்து வாழ்க்கை எனும் வாகனத்தில் கணவன் எனும் பதவி பிரமானத்தை ஏற்றான் . அது தான் அவன் செய்த முதல் தவறு ! தவறை கழிக்க நினைத்து பெருக்கி விட்டான். இப்போது விடை கூட்டலும், வகுத்தலும் !
மிகவும் சோர்வாய் இருந்ததால் சற்றே தலை சாய்த்தான் ஹரி படுக்கையில் ........
)0)0)0)0)0)0)0)0...............அப்போது ................ஷாலினியின் உரையாடல் ..............அசரிரீயாய் ஹரியின் உறக்கத்தில் ................
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஷாலினி : ஏங்க !மணி 6 ஆவுது ! இன்னும் தூங்கறீங்க ! எழுந்துருங்க ! எழுந்துருங்கங்க! .............
அதட்டலுடன் ஒரு குரல் !
போங்க ! போய் பால் வாங்கிட்டு வாங்க ! நேத்திக்கு முழுவதும் டிவி லே சீரியல் பார்த்ததால் ஒரே
தலை வலி ! கொஞ்சமாவது புரிஞ்சுக்கறீங்களா என்னை ? எத்தனை வேலை தான் நான் செய்யறது. இந்த
சமையல் காரியை வேற வேலை வாங்கனும். நான் படற பாடு உங்களுக்கு என்ன தெரியும் ?
இந்த பசங்களோட வேறே !!!!அப்பப்பா ? உங்களுக்கு ஏததவது கவலை இருக்கா ? வீடு இப்படி இருக்கே ? ஒண்டியா
நான் எவ்வளவு செய்யறுதுங்க !
போதாதுக்கு உங்களோட வேறே மல்லுக்கு நிக்கனும் ! ஏதாவது ஒன்னை சொன்னா இன்னொன்னை செஞ்சிட்டு
வருவீங்க ! என்ன வளர்த்து இருக்காங்களோ உங்கள் வீட்டில் ச்சே!!!! ச்சே !!!!!!!
கத்திட்டே இருக்கேன் காதில் விழலையா ! அப்புறம் tax கட்டனும்! ஆபீஸ் போகறதுக்கு முன்னாடி என்னை
parlour லே விட்டுடுங்க ! என் friends எல்லாம் சொல்றாங்க என் கண்ணுலே கரு வளையம் form ஆகி இருக்காம் !
கலாட்டா பண்றாங்க !
ஹரி : என்னடி முடிச்சுட்டியா ! இல்லே ஏதாவது பாக்கி இருக்கா ! உனக்காவது கண்ணுலே தான் கரு வளையம் எனக்கு
வாழ்க்கையே கரு வளையம் ! எந்த parlour லேயும் சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க !
ஷாலினி : நீங்க எப்போதும் அசிங்கமா இருந்தா தாங்க அழகு !
நான் தான் அழகா இல்லேன்னா அசிங்கம் !
ஹரி : இந்த பொம்பளைங்க பேசிட்டே இருப்பாங்க ! மூளையை கழட்டி வைச்சுடுவாங்க !
ஷாலினி : நாங்க உங்க மூளையை உபயோகிக்கறோம் இல்லை !!!!!!! சரி சரி ! நேரம் ஆவுது ! parlour மூடிடுவாங்க !
ஆபீஸ் லீவ் போட்டுடுங்க ! எல்லா வேலையும் நீங்க முடிச்சுடலாம் !
ஹரி : நான் வேலையை விட்டுடுறேன் ! நீ வேலைக்கு போயிட்டு வறியா ???
ஷாலினி : ச்சே ! ச்சே ! உங்களுக்கு உள்ள அறிவு எனக்கு இருக்குமா !
உத்தியோகம் புருஷ லட்சணம் !
ஹரி : அப்ப பொம்பளைங்க லட்சணம் ?????
ஷாலினி : புருஷன்களை வேலை வாங்கறது !
ஹரி : யாரெல்லாம் பெண்களை பத்தி உயர்வா பேசினானுன்களோ அவங்களை எல்லாம் சுட்டு தள்ளனும் !
பெண் விடுதலையாம் !
பெண்கள் நாட்டின் கண்களாம் !
மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமாம் !
ஆயுள் கைதியாய்
சிறை வாசம் பூண்டு
பெயிலில் கூட வெளி வர முடியாமல்
தவிக்கும்
ஆண்களின் விடுதலை எப்போது !
உன் கூட மனுஷன் வாழுவானா ! என்னை விட்டுடு ! நான் போறேன் ! எங்கேயாவது ஒழிஞ்சு போறேன் !
முதல் தடவையாய்
சுதந்திரத்தை பயன்படுத்தி தைரியாமாய் அதிகாரமாய் ஆணித்தரமாய் சொன்னான் ஹரி !
==========================================================================================================
ஷாலினி : நீங்கள் இறப்பதற்கு ஒரு நொடிக்கு முன் நான் இறக்கனுங்க அது தாங்க என் ஆசை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீங்க இல்லாமல் மனைவி என்கின்ற பதவி எனக்கு இல்லேங்க !
ஹரி : ??????????????????????????????????????
=============================================================================================================
இந்த பாசத்திற்கு ஈடு இணை உண்டோ ?!?!?!?????????????
==கிருபா கணேஷ் ===