படித்ததில் சிரித்தது

ஒரு டாக்டர், தன் கிளினிக் டாய்லெட் குழாய்
ரிப்பேருக்காக ஒரு பிளம்பரை அழைத்தாராம்.
அவனும் பத்து நிமிடத்தில் ஒரு சில
வாஷர்களை மாற்றிவிட்டு, சிலதை டைட் செய்து விட்டு
ரூ.1000-/= கேட்டதும் டாக்டர் அதிர்ந்து போனாராம்.
" நான் எம்.பி.பி.ஸ் படிச்ச டாக்டர்...என்னாலேயே
பத்து நிமிடத்துல 1000 ரூபாய் சம்பாதிக்க
முடியாது...
" பிளம்பர் சொன்னார் : " நீங்க சொல்றது ரொம்ப
கரெக்ட் டாக்டர்...
நான் டாக்டரா இருந்தபோதும் என்னாலேயும் அவ்வளவு சம்பாதிக்க முடியலை...அதனாலதான் தொழில மாத்திட்டேன்."
=================
தைரியராஜ் - : தினமும் சாயந்தரம் 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி கண்ணா...பின்னான்னு, நான் என்பொண்டாட்டியைத் திட்டுவேன்.
நல்லசிவம் - : அதென்ன 6 மணி கணக்கு?
தைரியராஜ் - : ஹி...ஹி...அப்போதான் அவ வீட்டுல இருக்கமாட்டா....
(எப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க வேண்டியதாயிருக்கு)
==================
நறுமணம் நடராஜன் - மாப்பிள்ளை பார்க்க போறப்போ, ஃபாரின் மாப்பிள்ளைன்னு சொன்னீங்க! ஆனா அவருக்கு தொடர் 'வாயுத்தொல்லை' இருக்குன்னு சொன்னீங்களா..?
தரகர்:- ஏன் என்னாச்சு?
நறுமணம் நடராஜன் - பார்க்க வந்த சொந்தக்காரங்க எல்லாருமே மூக்கை பொத்திக்க வேண்டியதாப்போச்சு..!
தரகர்:- நான் தான் அப்பவே சொன்னேனே ..
"மாப்பிள்ளை முன்னாடி வந்து நின்னார்னா எல்லோரும் மூக்கு மேல விரலை வெச்சிக்குவாங்கன்னு.¬.!
நறுமணம் நடராஜன் - ? ? ? ? ? ? ? ? ?
===================
Husband - எதுக்கு பக்கத்து வீட்டுக்காரிய திட்டறே?
WIFE : அவ வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்கன்னு
சமையல் வேலை செய்ய உங்களை இரவல்
கேட்கறா..!
============
ஸ்கூலுக்கு மட்டம் போட நினைத்து ஒரு சின்ன பையன்.....
போனில்,
பையன்: ஹலோ,இன்னிக்கு எங்க பையன் ஸ்கூலுக்கு வரமாட்டான்..அவனுக்கு உடம்பு சரியில்லை...
டீச்சர்: அப்டீங்களா..நீங்க யாருங்க பேசுறது...?
பையன்: எங்க அப்பா பேசுறேன்....
(இப்படித்தான் நெறைய பேரு...)
===================
ஒரு அம்மா முகமெல்லாம் வீங்கி போய் வந்தாங்க,
”டாக்டர்,எங்க வீட்டுக்காரர் தினம் ஆபிஸில் இருந்து வந்தவுடனே என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்,இதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க டாக்டர்”.
டாக்டர் : இந்தாங்கம்மா, இந்த வாய் கொப்பளிக்கிற மருந்து எடுத்துகிட்டு போங்க,அவர் ஆபிஸ் விட்டு வந்ததும் இந்த வாய் கொப்பளிக்கிற மருந்தை ஒரு அரை மணி நேரத்துக்கு வாயில் ஊற்றி கொப்பளிங்க,எல்லா பிரச்சணையும் சரியாகிடும்.
ஒரு வாரம் கழிச்சு அந்த அம்மா முகமெல்லாம் பிரகாசமா வந்தாங்க...
டாக்டர் ஒவ்வொரு முறையும் என் கணவர் ஆபிஸில் இருந்து வந்தவுடன்,நான் அரை மணி நேரத்துக்கு வாய் கொப்பளிக்க ஆரம்பிப்பேன்,அன்றிலிருந்து இன்று வரை என்னை அவர் அடிக்கவே இல்லை.
டாக்டர் : ”ஆபிஸில் இருந்து வந்தவுடன் தொண தொணன்னு தொந்தரவு கொடுக்காம அமைதியா இருந்தா என்ன நடக்குதுன்னு இப்பவாவுது புரியுதுங்களா.
=======================
பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.!
எதுக்குடி என்னை அடிச்ச??
உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு
எழுதி ஒரு பில்ல பாத்தேன்.
யேய் லூசு அது நான் நேத்து ரேஸ்
போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.!
அய்யயோ என்ன மன்னிச்சிருங்க....
சரி சரி விடு......
சிறிது நேரத்தில் கணவன் குளித்துவிட்டு
பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும்
மறுபடியும் ....பூரிக்கட்டையால் அடி விழுந்தது....
இப்ப எதுக்குடிஅடிச்ச??
ம்ம்....நீங்க குளிக்க போனதும் அந்த மீனாங்குற
குதிரை..... இந்த கழுத இருக்கான்னு .....உங்க செல்லுக்கு கால் பன்னுச்சு.!!!
=============
ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது
அதாவது பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள் மனைவியை அழைத்து செல்லலாம் என்று....
இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது....
சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின் மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது....
எல்ல்லா மனைவிகளின் பதில்......
"எந்த பயணம்??" என்ன சலுகை?" எப்போ???"

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Apr-15, 3:54 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 811

சிறந்த நகைச்சுவைகள்

மேலே