காதலும் குறுஞ்செய்தியும்



பாடல் கேட்கும் வசதி,
இணைய வசதி,
படம் பிடிக்கும் வசதி...என
எல்லாம்
என் கைபேசியில் இருந்தும்...,
உனக்கு
"குறுஞ்செய்தி"
அனுப்பும் வசதிதான்
நான்
அதிகம் விரும்பி பயன்படுத்துவது..!!
*************************************************
கைபேசி கையில் இருந்தால்...?
உனக்காக ஒரு
"கவிதை" குறுஞ்செய்தியாக உருவாகி
கொண்டிருக்கும்..!!
இல்லையென்றால்...,
"இதயம்"
உன் நினைவை அசை போடும்
துடிக்க மறந்து..!!
************************************************
பேலன்ஸ் இல்லை..,
அப்பா இருந்தார்..,
படித்துகொண்டு இருந்தேன்..,
நெட்வர்க் இல்லை..
என
எனக்கு பதிலாய்
பல மறுமொழிகள் வைத்திருப்பாய்...
ஆனால்
நான் தொடர்ந்து
உனக்கு "குறுஞ்செய்தி"
அனுப்புவதற்க்கான ஒரே காரணம்..
நீயென் பிரிய தோழி...!!
***************************************************
உனக்கு அனுப்பிய கவிதைகள் படித்த
உன் தோழிகள்
என்னை பார்க்க விருமபுவதாய் சொல்லும்
உனக்கேன் புரிவதில்லை..?
நான் உனக்கு அனுப்பியது
"கவிதைகள்" அல்ல
"காதல்" என்று..!!

எழுதியவர் : கோவை சதீஷ் (4-May-11, 2:52 pm)
சேர்த்தது : kovai sathish
பார்வை : 762

மேலே