ஆத்தா, -வைரமுத்து அவர்கள் கவிதையின் தாக்கம்

பஸ்டாண்டில் புது கடை
உன் வாசல் கோலம்
பின் வாசல் வேப்பஞ்செடி
இடிந்து விழுந்த கோழிக்கூடு
இன்னும் பல மாறிருக்கே

ஏன்யா மெலிஞ்சிருக்கன்னு சொல்லும்
உன் வார்த்தை மாறலயே !

"அண்ணா என்ன வாங்கி வந்தே
ஜீன்ஸ் பேண்டு" கேட்டேனே??
வந்துட்டான் என் மவன் "மாங்கா காக்க போய்ட்டுவாயா";
அடுக்களையில் ஆத்தா குரல்
"சொன்ன பேச்சை எப்ப கேப்ப
அழுக்கு துணி ஒன்னுமில்லை".

தம்பிக்கு கொடுத்துட்டேன்
அப்பாக்கும் செஞ்சிருவேன்
அழுக்கு துணி கேக்குரியே ஆத்தா உன்ன என்ன சொல்ல ???

தெய்வமுன்னு சொல்லிருவேன்
பேசாமா நீ இருந்ததில்லை

அப்பனையும் தாங்குவ, என் தம்பியையும் தாங்குவ,
என்னையும் தாங்குற உன்னை ,
நிலமுன்னு சொல்லிருவேன்!
ஆனா வேண்டாம்!
என்னதான் மதிச்சாலும் மண்ண மிதிச்சித்தான நடக்கனும்.

எத்தடையுன் தாண்டிருவ
நீருன்னு சொல்லிரவா?

வேர்க்குதுனா வீசுவியே,
உன் நினைப்பிலே
வாழுறேனே,
காத்துனு சொல்லிரவா?

தாகமுன்னு சொன்னா
பொறையேறி நின்னா
மழை போல தலையில
மெதுவா நீ தட்டுவியே,
வானம்னு சொல்லட்டுமா?

ஏதுவுமே வேண்டாந்தாயீ
எங்களுக்கே வெளிச்சம் தர மெழுகு நெருப்பா நீயிருக்க..
உன் பொறப்பா
நான் இருக்கேன்.
என் உயிரா நீ இருக்க
உருகி உன்னை விடமாட்டேன்!
நீ விட்டு போகும் போது
நான் அனைஞ்ச மெழுகாவேன்..
உன் கூட நானும் வருவேன்....

எழுதியவர் : சுந்தரபாண்டி.மு (21-Apr-15, 12:07 pm)
பார்வை : 59

மேலே