மழை பெய்யவில்லை

வேலைக்கு வரவில்லை ஜனம்
பொய்த்துவிட்டது வானம்
கிடைக்கவில்லை போட்ட பணம்
கனக்குது பாரமாய் மனம்
காக்க வேண்டும் மானம்
காசில்லா விட்டால் தூற்றும் இனம்
செத்துப் பிழைப்பது ஈனம்
உடம்பிலில்லை ஊனம்
பார்க்கவேண்டாம் ஏளனம்
உழைத்துவிடு தினம்
நம்பிக்கையே உன் மூலதனம் .

எழுதியவர் : arsm1952 (21-Apr-15, 3:10 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 132

மேலே