கவி நீ புனைந்திடு

வீண் பேச்சை குறைத்திடு..
சிந்தனையை கையால் வரைந்திடு..
மூச்சு நிற்கும்வரை
இலச்சியமே அதுவெனகொள்ளு....

மனதை திறந்துவிடு
மனப்பாரம் அதை இறக்கிவிடு...
கவலைக்கு மருந்து சொல்லு
கவலையை நீ மறந்துவிடு...

கனவு நிறைய்ய சொல்லு
நினைவை புதுமையாய் சொல்லு..
உலகு உணர சொல்லு
தவறை உணர்த்தி சொல்லு...

கத்தியை புத்தியால் சொல்லு
உன் சக்தியை கத்தியாய் சொல்லு..
கொடுமை குறைய சொல்லு
இனி புதுமை பிறக்க சொல்லு....

மறைவை மருந்தாய் சொல்லு
நிகழ்வை ரசித்து சொல்லு ...
எதிர்வை உவகையாய் சொல்லு
இனி சொல்வதை புதுசா சொல்லு.…

உனக்கென்று ஒரு பாதை கொள்ளு
உன் வேகம் மாறாமல் கொள்ளு...
கருத்துக்கள் குவியும் போதும்
அதை எழுத்துக்கே அர்ப்பனமாக்கு ....

தமிழை நீ மதிக்கும்போது…
தமிழ் வாழ நீ விரும்பும் போது …
தடைகள் ஏது வந்தாலும்
இனி அச்சமில்லை தமிழா …..
நீ எழுந்து நில்லு ….!!

தமிழோடு விளையாடவென
அந்த ஈசனே வந்தாலும்
தயங்காமல் நீ எதிர்கொல்லுடா …!!!
உன் ரத்ததில்லேனும்….
தமிழ் இனி வீறு நடை கொள்ளட்டும் …..!!!!

எழுதியவர் : வீ கே (20-Apr-15, 12:37 pm)
பார்வை : 73

மேலே