பெரிய மனத்தான் பாரதி
பெரிய மனத்தான் பாரதி
தேரையே ஈந்தவன்
பாரி வள்ளல் முல்லைக்கு!
தன்னையே ஈந்தவன்
பாரதிதான் தமிழுக்கு.
சொல்லுவார் சொல்லுவார்
சொல்லு தமிழ் வாழ்வென்பார்.
சொல்லுவா ரெல்லோரும்
சொல்லுவா றாவதில்லை .
உள்ளமதி லுள்ளதை
உள்ளபடி சொல்வதை
கொள்ளுவது கடினமே!
கொண்டவன் பாரதியே!
ஊர் சொல்லும் புகழ்ச்சிகள்
நேர்வதவன் பொறுப்பல்ல.
யார் சொல்லும் எதிர்பார்த்தும்
தேர்வதல்ல அவன் பாடு.
பாரியகன் பாரதி
யாரெனக் கேட்போரே!
நேர்மனங் கொண்டோரெல்லாம்
பாரதிதான் அவனென்பேன்.
கள்ளமில்லா உள்ளங்களாம்
வல்லவனாய் வாழ்த்துவோம்!.
நல்லது செய்வாரெல்லாம்
உள்ளமதில் ஏற்றுவோம்!
பெரிய மனங்கொண்டவன்
அரியவன் வாழ்வாக!
புரட்சிதான் பாரதிதான்
அறியவன் தமிழாக.!
கொ.பெ.பி.அய்யா.