தமிழ் வாழ்த்து
வெயிலுக் கேற்ற நிழலாக
--------- வீசும் தென்றல் காற்றாகக்
கையில் தாசனின் கவிகொண்டு
--------கன்னித் தமிழும் வாழ்கவென்று
மையல் தமிழே உனைகண்டு
------- மயங்கு கின்றேன் நானின்று
வையம் வாழ வகைசெய்
------- வாழும் தமிழே வாழியவே !!