காதலன் கணவனானால்
உன் கண் இமையால் மயக்க வைத்தாய் அன்று
அந்த காரணத்தால் சமைக்க வைத்தாய் இன்று
உன் கன்னத்தில் விழும் குழியால் ஈர்க்க வைத்தாய் அன்று
அந்த காரணத்தால் தரையை பெருக்க வைத்தாய் இன்று
உன்னை பார்க்கும்பொழுது வெட்கப்பட்டு கால் விரலால் கோலம் போட்டேன் அன்று
கையால் வீட்டின்முன் கோலம் போடுகிறேன் இன்று
உனக்கு ஃப்லவர் கொடுத்து தாலி கட்டினேன் அன்று
அந்த பாவத்துக்கு காலீஃப்லவர் வெட்டுகிறேன் இன்று
உன் மீது காதலில் விழுந்தேன் அன்று
என்னை அடிக்காதே என்று உன் காலில் விழுகிறேன் இன்று
உன்னை சேலையில் பார்க்க இஷ்டப்பட்டேன் அன்று
உன் சேலையை துவைக்க கஷ்டப்படுகிறேன் இன்று
எந்த வேலையும் உன்னை மாத்திரம் நினைத்துக்கொண்டிருந்தேன் அன்று
பாத்திரம் கழுவுற வேலைகூட நான் தான் பார்க்கிறேன் இன்று.