காதல் கல்யாணம்தாண்டி சிறந்தது
ஏண்டி காதல் கல்யாணம் தான் சிறந்ததுன்னு சொல்லற?
ஆமாண்டி நாம அரைக் கெழவி ஆகற வரைக்கும் சாதி சடங்கு சமபரதாயம் ஜாதகப் பொருத்தம் எல்லாம் பாத்துட்டே இருப்பாங்க. மாப்பிள்ள கெடச்சாலும் நம்பள அஞ்சாறு வயசு மூத்தவனுக்குக் கட்டிக் கொடுப்பாங்க. வரதட்சணப் பிரச்ன வேற இருக்கு? காலம்பூரா கன்னிப் பொண்ணா வாழணும். இது தேவையா நமக்கு? ஆம்பளீங்க வீசற காதல் வலைல நாம விழுந்தா சமயத்திலெ ஆபத்தா முடியும். நாம தான் வலை வீசி ஏமாந்தவனா நமக்கு சரி வயசிலெ அல்லது நம்பளவிட அஞ்சாறு வயசு சின்னவனாப் பிடிக்கணும்.
அதிலெ வேறென்ன லாபம். சரி வயசு அல்லது நம்பளவிட சின்னவனா இருந்தா அவன மெரட்டி உருட்டி அடக்கி வைக்கலாம். பேரச் சொல்லிக் கூப்பிட்டாலும் வாடா போடான்னு சொன்னாலும் கோவிச்சக்கமாட்டான். சாதி வரதட்சணையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமா ஒழிஞ்சு போயிடும்.
ஆமாண்டி நீ சொல்லறது சரிதாண்டி.
(காதல் மணம் புரிந்தவர்கள் தவறாக நினைக்க வேண்டாம்)