கவிஞன் ஒரு சமூக ஆர்வலன்
கவிஞன் ஒரு சமூக ஆர்வலன்.
ஆண்டுகள் கடந்தும் அகவை வெல்லுவான்.
மீண்டும் பிறந்தும் கவிதை சொல்லுவான்.
வேண்டும் விதமாய் வடிவம் கொள்ளுவான்.
ஆண்டும் தமிழில் அமுதம் அள்ளுவான்.
நைந்திடும் சமூகம் உயர்ந்திட வேண்டுவான்.
தொய்ந்திடும் மனிதம் எழுந்திடத் தூண்டுவான்.
நெஞ்சினிற் பசுமை நிறைந்திடப் பாடுவான்.
எஞ்சிய உலகை தழைந்திடத் தேடுவான்.
காமராசன் போலவன் மெய்யாகத் தானும்
காமந்துறப் பானிலை தான் ஆனாலும்.
காதல் மோகம் இயற்கையிற் பேணுவான்.
ஆதல் இறைவனை அழகினிற் காணுவான்.
அழகை வாழ்த்தும் அன்பன் கலைஞன்.
அறிவை ஏற்றும் நண்பன் அறிஞன்.
போற்றுவன் ஆற்றுவன் சத்தியப் புவிஞன்.
நாத்திக ஆத்திகன் வித்தகக் கவிஞன்.
நட்பின் நட்பாம் மென்மை கவிஞன்
கற்பின் கற்பாம் உண்மை கவிஞன்
விற்பன்னச் சிற்பி தன்மை கவிஞன்
அற்புதக் கற்பி வெண்மை கவிஞன்
உயிர்கள் எல்லாம் அவனுறவாக
உள்ளங் களிப்பான் தன்னலமாக.
உலகம் எல்லாம் அவனிடமாக
கள்ளம் மொழியான் தன்னினைவாக.
வளமாய் நலமாய் வையம் புகழ்வான்
வாழ்ந்தும் அனுபவம் வழியும் புகல்வான்
கருத்தே பொருத்தும் கவிஞன் வாழ்வான்.
ஆழ்ந்தும் கனவிலும் அறிவினை ஆள்வான்.
பிறரின் நலமே பேரின்பம் என்பான்.
பேணும் மனிதமே நேரன்பும் என்பான்.
துறவி நிசமாக தூயன்ப னாவான்--கவிஞன்
தானும் சமூகம் ஆர்வலன் ஆவான்.
கொ.பெ.பி.அய்யா.