எனக்கும் காதல் வந்தது

என் கைபேசியின்
தொடுதிரை மீதும்
உன் அழகிய பிம்பம்,
அதைத் தொட்டுபார்த்து
வெட்கம் கொள்கிறேன்;

பற்பசைப் பிதுக்க
குட்டித்தேரை ஒன்று பாய்ந்ததாய் என் எண்ணம் வண்ணம் கொள்கிறது;

சுடுவிக் கொண்டு
என் விரல்களை சுட்டுக்கொள்கிறேன்
உன் நினைவில் சுகமாய்;

சுடரொளியாய்
என் கண்ணில் பாய்ந்தாயடி
என் கண்கள் கூச உதடுகள் பேச எனக்கும் காதல் வந்தது;

எழுதியவர் : அரிபா (22-Apr-15, 9:22 am)
பார்வை : 156

மேலே