வழியனுப்பு

பாரிஜாத பூ கிளம்பி
போய்விட்ட வருத்தத்தில் உன்
பள்ளிக்கூடம்.
மாலை வெயில்தான் என்றாலும்
மேகம் உனக்காக
குடை பிடித்து வருகிறது..
உன் நிழலை சுமந்தபடி
உன்னுடன் வரும் உன் தோழி..

முதுகில் புத்தகமூட்டையையும்
கண்களில் கவிதையையும்
சுமந்து வருகிறாய்..
எதிர்வீட்டிலிருக்கும்
என்னிடம் கவிதைகளை
இறக்கி வைத்துவிட்டு
புத்தகங்களை உன்னுடன் எடுத்துசெல்கிறாய்..


வாசல் சென்றதும் தோழிக்கு
வழியனுப்புவது போல எனக்கும்
ஜாடையில்.. காட்டுகிறாய்..
தோழிக்கு வழியனுப்பு..
எனக்கு உள் அழைப்பு.
நீ விடை கொடுக்கும்
அந்த நொடியில் ஆரம்பிகிறது

எழுதியவர் : தை ரூசோ (22-Apr-15, 8:52 am)
சேர்த்தது : தை ரூசோ
Tanglish : vazhianuppu
பார்வை : 96

மேலே