என்னவளே !!!


உளிகொண்டு செதுக்காத சிற்பம் நீயோ!

ஒளிகண்டு சிரிக்காத கமலம் நீயோ!

சொல்கொண்டு எழுதாத கவிதை நீயோ!

மொழிகொண்டு பேசாத மழலை நீயோ!

வண்டுவந்து தீண்டாத மலரும் நீயோ!

வாசல் வந்து வீசாத தென்றல் நீயோ!

குயில்வந்து கூவாத சங்கீதம் நீயோ!

குரல்கொண்டு பாடாத தாலாட்டும் நீயோ!

மொழிகொண்டு விளையாடும் விழியும் நீயோ!

முத்தமிழ்கொண்டு உறவாடும் கவியும் நீயோ!

நீயே என் உயிரும் ஆவாய்...........

எழுதியவர் : (4-May-11, 11:28 pm)
சேர்த்தது : யுவராஜ் சீ
பார்வை : 434

மேலே