எத்தனை விந்தைகள் …

அடடா …
எத்தனை விந்தைகள்தான்
இவ்வுலகிலே....
அத்தனையும் காணாமல்
செத்து நான் போவேனோ
இறைவா …..!!
கொஞ்சம் காலனிடம்
எனக்கு அவகாசம் சொல்லு …!!!
எத்தனை விசித்ரம்
இந்த சில்வண்டுகளின்
பிண்ணனி இசை ….!!
இங்கே எறும்புகளின்
மண்மீது சித்திரம் ..!!
இரவிலே
மின்மினி பூச்சிகளின்
மாயா ஜாலம் ….!!
அப்பப்பா…
ரசனை கெட்டவனுக்கும் கூட
ரச குல்லாமேல் ஆசை வரும் ….!!!
பகலவன் காதலில்
மலர் அல்லி சிரிப்பது …!!
யார் இயக்கத்திலும்
நான் காணா ஒளிப்பதிவு ….!!!
மழை காலம் …
அதோ தெரிகிறது
வானத்தில்
பிரம்மன் காதலியின்
தங்க அட்டிகை
பொது ஏலத்தில் …!!!
குயில்களின் பாட்டில் …
கோழி குஞ்சுகளின் ஜதியில் …
காக்காவின்
வானிலை அறிக்கையில்
சட்டென்று வந்ததையா
அந்த கள்ள மழை ….!!!
காற்றடிக்கும் வேலையில்
ஆனந்த தாண்டவமாடுதையா
மரங்கள் ….!
பயத்தில் அல்ல …
காதலி அவள் சொல்லாமல்
வந்துவிட்ட சுகத்தில் …!!
இடையிடையே மகளை
புகுந்த வீடு அனுப்பிய
பெற்றோர்போல மேகங்கள் ….!!
அவள் தரையிறங்கும் அழகை
புகைப்படம் எடுகின்றனவோ …!!!
அவள் தொட்டு
தரை இறங்கியதால் …
வண்ண மலரெல்லாம்
சோகத்தில் மண்ணை பார்கின்றனவோ …!!!
வீட்டுக்குள் இருக்கும்
பிஞ்சு குழந்தைகளெல்லாம்
அவள் வருகையில் நாட்டியமாடி…
செல்லக்கைகளால் அவளை
சீண்டி பார்கின்றனவோ ….!!!
பலர் முகத்தில் மகிழ்ச்சி …
சிலர் முகத்தில் எரிச்சல் …
ஒருவேளை இவர்கள் என்ன
காதலுக்கு எதிரிகளோ …!!!
இன்னும் இன்னும்
எத்தனை விசித்திரங்கள் …!!
உன் படைப்புக்குமட்டும்
ஏன் கிடைக்கவில்லை
இன்னும் விருதுகள் ….!!!