ஆலம் சாலைக் குளிரோவியம்

வேனலுக்கு வேண்டாம் கொடைக்கானல் போதுமே
ஆல மரத்தின் நிழல்

அல்லாவின் ஆலமரம் நில்லாமல் போனாலே
நல்லா இருக்குமா சொல்

ஆலத்திற் கோவிழுது தானழகு காதலுக்கு
மாலைப் பொழுதே அழகு

கோடையில் தண்ணிழல் தந்திடும் நல்ஆலம்
சாலைக் குளிரோ வியம்

விழுதுவிட்டு நீண்டுவாழு மாலம் இயற்கை
வரலாற்றுப் புத்தக மாம்

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-15, 5:30 pm)
பார்வை : 76

மேலே