அடக் கொடுமையே

அப்பாவும்..அம்மாவும்
வேலைக்கு போயாச்சு..
வேலைக்கார ஆயாவும்
டாட்டா சொல்லிப் போயாச்சு..
ரொட்டியில் வெண்ணையும்
பெட்டியில் வச்சாச்சு..
லீவுநாள் என்பதால்
நண்பர்கள் வந்தாச்சு..
வாட்சப்பும் கூகுளும்
மேய்ந்தே முடிச்சாச்சு ..
பேப்பரும் வந்தாச்சு..
இதென்னடா கொடுமை..
L K G ரிசல்ட் வந்தாச்சு ..
என் நம்பர் ஏன் காணாமப் போச்சு..
விட்டுப் போனதில் வரும் நாளக்கி ..
என் பக்கத்தில் எக்சாமில் கருவாச்சி ..
ஆன்சர் எல்லாம் எனக்கு காமிச்சி ..
பாஸ் பண்றதுக்கு நல்லா உதவுச்சி..
ஹையா..ஹைய்யா..ஹை..ஹை
ஹொய்ய..ஹோயா..ஹோய்..ஹோய்..!

(இப்படியும் ஒரு நிலை வருமோ..?)

எழுதியவர் : கருணா (23-Apr-15, 11:21 pm)
பார்வை : 245

மேலே