உடைந்ததில்

பல டிவி ரிமோட்டுகளையும்
சில டிவிடி ரிமோட்டுகளையும்
உடைத்தாகி விட்டது.

டிவியை அணைத்தும் முடக்கியும்
ஒலிபரப்புகள் ஓய்ந்தபாடில்லை.

உறக்கத்திலும் அலைவரிசையை
புரண்டளிக்கும் குட்டியவனுக்கு
நல்லவேளை ரிமோட்டில்லை.

எழுதியவர் : சர் நா (24-Apr-15, 5:36 pm)
பார்வை : 98

மேலே