உறக்கம் வேண்டாம் அவளுடன்

அவள் இல்லாமல் நான் உறங்கியதில்லை...
அவளுடன் உறங்குவதால் நோய்கள் வரலாம்....
இதுவரை அவள் என்னை உறங்கவிட்டதில்லை...
காதறுகே முனுமுனுத்து கடுப்பேற்றுவாள்...
திரும்பிப்பார்த்தால் ஒளிந்து கொள்வாள்...
அவள்தான் டென்னிஸ் விளையாட்டை இந்தியாவிலே பிரபலப்படுத்தியவள்....
அவளை கொலை செய்ய நான் தீட்டாத திட்டம் இல்லை....
அடிக்கடி கோபத்தில் அவளிடம் நான் சொல்லும் வார்த்தை""" அடியே கொசு..உன்ன கொல்லாம விடமாட்டேன்.."""
அவள் ""கொசு""..

எழுதியவர் : ப.விவேகானந்தன் (25-Apr-15, 12:24 am)
பார்வை : 94

மேலே