பொல்லாத உலகம்

குள்ள நரி கூட்டம் ஒண்ணு
கூட கூட சுத்துது!
அத கூட்டிகிட்டு போகும் போது
கால கால வாருது!
காட்டுக்குள்ள சுத்தும் போது
ஊளை இடுது-
அது காட்ட விட்டு வெளியே வந்தா
காட்சி ஆகுது-அதை
காணும் போது எல்லோருக்கும்
அதிர்ஷ்டம் அடிக்குது
அடிச்ச பின்னே காசு எல்லாம்
காற்றில் பறக்குது!
பறக்கும் போது பிடிக்க
ஒரு கூட்டம் இருக்குது!
கூட்டத்துல கரடி ஒண்னு
கால மிதிக்குது
மிதிக்கும் போது காளை
ஒண்ணு மிரண்டு போகுது
போகும் போது பாடம்
ஒண்ண சொல்லி போகுது
பொல்லாத உலகமடா பாத்து நடடா
இல்லாட்டி நீயும் ஒரு கோழி குண்டடா!

எழுதியவர் : (24-Apr-15, 11:06 pm)
சேர்த்தது : நக முருகேசன்
Tanglish : pollatha ulakam
பார்வை : 174

மேலே