பணம் தேடும் மனமே…

தேடிய பணம்
அது நிலையானது
நிற்காதது உனைத்
தேடிவந்த பணம் …!!
இரக்கின்ற பணம்
போதாதது எப்போதும்
இரந்து நிற்பின்
இறுதியில் நீ பிணம் …!!
இருக்கின்ற பணம்
போதுமென்ற மனமிருந்தால்
வாழ்வேன்றுமே
உனக்கு சுகம் …!!
வட்டியில் தேடும் பணம்
குட்டிக்கு உதவுமென்றால்
உன் குலமே நாசமாயிடும் …!!
பக்தியில் உருகி
இறைவன் கொடுக்குமென்றால்
அது உந்தன்
மூடத் தனம் …!!
வெற்றியோடு நீ தேடி
பகிர்ந்து உண்டால்
உன் குலமே
இறைவன் பக்கம் …!!
அதிஷ்டத்தில் வரும் பணம்
அந்த கணம் மட்டும் தான்
அது இஷ்டத்தில் மாறிப்போகும் …!!
முறையில்லா வழியில்
கிடைக்கின்ற பணம் எல்லாமே
கறைபட்டவை ஆகிவிடும் …!!
நாடிய செல்வம் அதில்
நாலு பேர்க்கு உதவி செய்யு...
நீ தேடிய செல்வம் அது தீர்ந்திடினும்
நாற்பது பேர் உதவி நிற்பார் …!!