என்னவனே நம் சந்திப்பு - சகி

என்னவனே ..............

கண்ணெதிரே காணும்முன்னே
எண்ணிலடங்கா ஊடல்கள் .............

நாம் சந்தித்துக்கொண்டே
வருடம் கடந்துவிட .............

நாட்களையும் மணித்துளிகளையும்
எண்ணிக்கொண்டே என் நாட்கள் நகர ..............

அரபுமண்ணில் இருந்து
நீ வரும் செய்தி அறிந்து
அந்நாட்களை எண்ணலானேன் .................

நம் காதலின் சிறப்பே
நமக்குள் உண்டாகும் ஊடல்தானே .............

நாம் சந்திக்கும் முன்னாள்
இரவுகூட ஊடலே .................

நாம் சந்திக்க இரவுமுழுவதும்
நீ மேற்கொண்ட பேருந்துப்பயணம் .............

உன்னை காண ஏங்கும்
என் விழிகளில் உறக்கமேது ..............

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..................

சூரியனின் உதயநேரம்
நமக்காக சற்று முன்னதாகவே
இருக்கவேண்டினேன்......................

மனமெங்கும் நம்
காதல் நினைவுகளுடன் .......................

உன்னில் என்னைக்காண
என்னில் உன்னைக்கான
இருமனமும் ஏங்கும்
நம் காதலின் தவிப்பு.................

பேருந்துநிலையம் ...........

இருவருமே விழிகளில்
காதல் மொழிகளை மொழிபெயர்த்தோம் ................

நீ சூடிவிட்ட மல்லிகையின்
மனம் ஆயுள்முழுவதுமே
வீசும் என் கூந்தலில் ............

எனக்கு மிகவும் பிடித்த
நீண்டதூரப்பேருந்துப்பயணம்...............

என்னவனே உன்னுடன் ............

உன்னுடன் உன் கரம்
கோர்த்துக்கொண்டு நாம் .............

உன் தோள் சாய்த்து
உன் கரம் கோர்த்து
உன்னை ரசித்துகொண்டே நாம் ..............

உன் இதழ்களின்
மொழிகள் இசையாக
என்னை மீட்க ...........

மௌனமாய் சில
போர் தான் நமக்குள்ளே ...............

பலநிற மலர்கள்
நம்மை ரசிக்க ..........

உன் காதல் சொல்ல
வண்ணமலர் ஒன்றை
உன் கரம் பறித்து .............

உன் பூ இதழ்களால்
ஐ லவ் உ என்றாய் ..............

வெட்கத்தில் என் முகம்
இன்னும் சந்தோஷத்தில்
மலர ..............

இருவரும் நம்
காதல் நினைவுகளுடன்
நடைப்போட .......

நாம் ரசித்த அல்லிமலரும் ......
மழைத்துளிகளும்................

மனதில் சுகமான
நாட்களாக என்றுமே ...................

நம் எதிர்கால
வாழ்க்கைப்பற்றியும்
பேச நிமிடங்கள் நகர ..............

அந்நாள் நமக்கானது மட்டுமே
என்று எண்ணினேன் .............

மீண்டும் நமக்கான
நாட்களுக்காய் உன்னவள் ..........

காத்திருக்கிறேன் ..............

எழுதியவர் : sagimuthalpoo (25-Apr-15, 3:20 pm)
பார்வை : 207

மேலே