முதிர்ச்சியில்லா வியர்வைத் துளிகள் - உதயா

துயில்கள் இமைகளை இறுக்கின
............... சோர்வோ மேனியை பிழிந்தன
கடமைகள் கால்களை நகர்த்தின
............... உயிரோ வியர்வையாய் உடலை துறந்தன
முட்டி எழும்போ முறிந்தேப் போனது
............... இருப்பு எலும்போ இடைவெளி விட்டுப்போனது
முதுகு எலும்போ மூன்று துண்டாய் பிளந்தது போனது
............... குடும்பத்தின் சுமையோ தோளிலே நின்றது
உழைப்பின் ஓட்டத்தில்
............... வயிறு புசித்தலை மறந்தது
பிள்ளைகளின் நினைப்பிலே
............... தேகம் சுகத்தினை வெறுத்தது
மாதத்தின் இறுதியில் வீட்டு வாடகையோ
............... என்னை உழைப்பின் எல்லைக்கே விரட்டியது
வருடத்தின் இறுதியில் பிள்ளைகளின் கட்டணமோ
............... என் இறுதி சொட்டு உதிரத்தையும் ஏப்பம்விட்டது
உறவுகளில் வருகைகள்
............... என் பாதத்தினை கிழித்துவிட்டது
உடன்பிறப்புகளின் பிடுங்கல்கள்
............... என் தோளினை துகளாய் மாற்றிவிட்டது
சேய்களின் நலனுக்காக
............... என் உணர்ச்சி செல்கள் செத்துப்போனது
தாரத்தின் நிலையை எண்ணியே
............... கண்ணீரும் முகத்திற்கு மழையானது
வயது முதிர்ச்சியை நெருங்கியப்பின்னும்
............... உழைப்பு முடிவினை நெருங்கவில்லை
சேய்களின் சேய்கலுக்காக
............... வியர்வை இளமையை இழக்கவில்லை