பட்டப்படிப்பும் கூலிவேலையும் - சகி

பட்டமும் படிப்பும் ....

காலைக்கதிரவன்
உதயாமாகுமுன்னே
கட்டிடப்பணியோ இல்லை
களை எடுக்கும் பணியோ........

உடல் சோர்ந்தாலும்
உள்ளம் உற்சாகத்துடனே
உழைக்கும் என்றுமே ...........

உண்ணும் உணவும்
உறங்கும் இரவும்
என்றென்றுமே இதமே ..............

கூலிவேலையாகினும்
உள்ளமும் உடலும்
என்றுமே ஆரோக்கியத்தின்
அடையாளமே .............

ஆனால் ........

பட்டப்படிப்பு பெற்று
கணினிமுன்னமர்ந்து
உழைத்தால் உள்ளம்
என்றுமே சோர்வு தான் ..........

உற்சாகம் கொண்டாலும்
அதிகாரிகளின் அதிகாரமும்
பேச்சும் மனதை காயபடுத்தும் .........

உடல்வலிகளுடன்
உழைந்துவந்து
உறங்கினால் விழிகள்
தானே உறங்கும் ....

மனவலிகளுடன் உழைந்து
வந்து உறங்கினால் விழிகள்
உறங்கவே மறுக்கும்...........

மனமெனோ என்றுமே
ஒரு மனளுத்தமாகவே
உணர்கிறது .............

மாறும்நிலை மட்டும்
வரபோவதில்லை என்றுமே .......

எழுதியவர் : சகிமுதல்பூ (30-Apr-15, 1:57 pm)
பார்வை : 669

மேலே