-24,மார்ச்,2015சென்னை,தோரயமாக மாலை 7 மணி,தெருவோரத்தில்

-24,மார்ச்,2015.சென்னை,தோரயமாக மாலை 7 மணி,அந்த தெருவின் கடைசியில் கண்கள் மலைத்துப் போகும் அளவிலான வண்ணங்கள் நிறைந்த பளைகைகள் மின்னிக்கொண்டு இருந்தன.அதன் ஓரங்களில் பணக்காரர்களின் ரதங்கலான Benz,BMW,Audi போன்ற கார்கள் நின்று கொண்டிருந்தன.அவற்றிற்கு அழகு சேர்க்க பளிங்குகளுக்கு அரசன் போன்று மற்றுமொரு வெண்ணிற கார் ஒரு வித கர்வத்துடன் வளைந்து நின்றது.அதிலிருந்து பாதி சிரைத்த முகத்துடன் ஒருவர் இறங்கினார் இக்காலத்து வெள்ளைகார துறை போன்று.
"Royal's Pub Welcomes U sir !"
கோட் சூட் போட்ட காவலர்கள்,புன்னகை மலர பணக்கார பாதிச்சிரிப்புடன் வரவேற்றனர்.மற்றொரு காவலாளி
"Sir ! We're sorry,Pairs only allowed here!"
அதற்கு நமது வெள்ளைக்கார துரை,
" Yeah,I know,am just waiting for same "
என்று அவர்களது ஆங்கிலத்திற்கு ஈடு கொடுத்தார்.திடீரென ஏதோ இழவு வீட்டில் பெண்கள் கூடி ஆங்கிலத்தில் அழுவது போன்று சத்தம் கேட்டது .நம் கதாநாயகர் தன் பாக்கெட்டில் இருந்து விலை மிகுந்த கைப்பேசியை எடுத்து விரலால் ஏதோ தேய்த்தார்.
"Honey! I am sorry,i can't come today,என்னோட Husband வெளில போனும்னு சொல்லிடாரு!!!"
உடனே நமது அறைதாடிக்காரருக்கு முகம் சட்டென வாடி போனது.எதுவும் பேசாமல் கைப்பேசியை பாக்கெட்டில் வைத்து விட்டு கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைதுகொண்டார்.சிறிது நேர அமைதிக்கு பின்பு காவலர் ஒருவர்,
"sir! there's a girl alone.Can U join with her?"
முகம் திரும்பிய நாயகன்,
"Why not?"
"Where's she?"
ஆவலுடன் கேட்டார்.காவலர் ஒரு பெண்ணை சுட்டிக்காட்டினார்.பின்னிருந்து பார்க்க சிறுபிள்ளையாக தோன்றினாலும் மேலை நாடு இளவரசி போல கட்டமைப்பு பொருந்தி இருந்தாள்.சுமார் 15 வயது என கணக்கிடலாம்."நீ ரொம்ப அதிஷ்ட காரன்டா அருண் !!!" என்று தனக்குள்ளேயே முனகிகொண்டார்.நல்ல வேலை நம் நாடு பணக்காரர்களுக்கு இச்சையின் மனவார்தைகளாவது தமிழில் வருகிறதே!!!.நமது நாயகன் பலவேறு கனவுகளுடன் இளவரசியை நெருங்கி அவளின் தோலில் கை வைத்து,
"Excuse me princess,Could U please join with me?"
என்று மெல்லிய குரலில் கேட்டார்.இளவரசியும் கழுத்து சுளுக்கா திரும்பினாள்.இளவயது மின்னிடும் அவளது முகம் சட்டென சுருங்கியது பயம் வழி விட துவங்கியது .
அவளின் அடுத்த வார்த்தை ...
"அப்பா !!! ???..."
"நீங்க ?..."


"கலாச்சாரம் என்பது கட்டுப்பாடுகல்ன் பட்டியல்கள் மட்டுமல்ல,
அவை,வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட மகிழ்ச்சி சுவடுகளின் மூலதனத்தொகுப்பாகும்"...

எழுதியவர் : விஜயகுமார் ஜெயராமன் (3-May-15, 11:31 am)
பார்வை : 184

மேலே