காவியமானவள்-பகுதி1

மங்கை என்பதன் இலக்கணம் அவள்...
பொறுமை,தெளிவு,
கருணை,அன்பு இக்குணங்கள் மிகுதியாய் பெற்றவள்...
விண்ணுலகும் வியந்து பார்க்கும் நட்சத்திரங்கள் அட்சணை தூவும் நிலவு பூச்சூடும் ஆம் தேவதையின் புதழ்வியவள்...
தமிழினி பள்ளி மேல்நிலை வகுப்பு ...
பதினாறு வயது ஆயினும் குடும்ப பொறுப்புகளை கவனிப்பதில் தேர்ந்தவள் அப்பா இல்லாததால் அன்னையின் இன்ப,துன்பங்களை உற்றுநோக்கியதால் குடும்ப சூழ்நிலை அறிந்து நடந்து கொள்ளும் பாங்கு பெற்றவள்...
அன்னையின் ஒரே பாச மலர்...
ஆதலாளோ என்னவோ கேட்டயாவும் கிடைத்து
விடும் இருந்தும் அன்னை நிலை அறிந்து மிகத்தேவையானதை மட்டுமே தெளிவுசெய்வாள்...
கணவன் இறந்தபின் கிடைக்கும் வேலைக்குச் சென்று குறை இன்றி வளர்த்து வந்தாள் அன்னை தமிழரசி...
பள்ளி மேல்நிலை முடிந்ததும் திருமணம் செய்து வைத்துவிடலாம் என நினைத்திருந்தவளுக்கு
இடி விழுந்தது போல் செவிக்கு எட்டியது குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம்...
ஆதலால்
மனதோடு மறைந்தது
அந்த கனவு...
சரி நன்றாக படிக்க வைத்து யாருக்கும் அடிமையின்றி தன் மகள் ஊர் போற்றும் படி வாழ வேண்டும் என புதிய ஆசையை பற்றிக்கொண்டாள் தமிழரசி...
சில நாட்களில் தேர்வு முடிவு வெளியாகுமென ஒளிபரப்பிய செய்தி கேட்டு ஆறுதல் அடைந்தால் நல்ல கலலூரியில் சேர்த்துவிட வேண்டுமென வினவினாள்...
அந்த நாள் வந்தது...
ஆம் தேர்வு முடிவு வெளியானது...
அம்மா ரிசல்ட் பார்த்துவிட்டு வருகிறேன் என காலை ஒன்பதரை மணிக்கே பள்ளி சென்றாள் தமிழினி...
மணி பத்தரை ஆகியும் எந்த செய்தியும் இல்லை பயத்தில் படபடத்தால் தமிழரசி, தேர்வில் தோல்வியடைந்து விடுவாளோ என்றல்ல பெண்னை தனியாக அனுப்பி இருக்கிறோமே இன்னும் வீடு திரும்பவி்ல்லையே என்ன நடந்ததென தெரியவில்லையேயென
இருக்காதா பின்னே கல்லிற்க்கு பாவாடை தாவணி அணிவித்திருந்தாலே குறுகுறுவென பார்க்கும் கூறு கெட்ட சமுதாயம் அல்லவா இது,ஒன்றா இரண்டா நாள்தோரும் நிகழும் பாலியல் கொடுமைகள் பயத்தில் மனது திக் திக் என ஒலித்தது இதய துடிப்பின் ஓசை...
உடனே பக்கத்து வீட்டு ஆனந்தை அழைத்து பள்ளிக்கு போய் பார்த்துவரச் சொல்லலாமா?
இல்லை நாமே சென்றுவரலாமா என மனதில் பலவாரு ஓடின எண்ண அலைகள்...
இறுதியில் மதிற்ச்சுவரை எட்டி அழைத்தாள்
ஆனந்தை ...
அவன் கடைக்குச் சென்றிருப்பதாக
எதிர்க்குறல் அவன் அன்னையிடமிருந்து வர தானே சென்றுவரலாம் என விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினால் தமிழரசி...
வீதியை கடந்திருப்பாள் எதிர்ப்பட்டான் ஆனந்த் தமிழரசியை பார்த்தவுடன் பரவசத்தில் ஆன்டி உங்க மகள் என வாய்திறக்க பதறிய குரலில் எங்க ஆனந்த் நீ பார்த்தயா அவளை எங்க பார்த்த என வார்த்தைகளை அடுத்தடுத்து அடுக்கினாள் தமிழரசி,
ஆன்டி உங்களுக்கு விசயமே தெரியாதா?
என்ன ஆனந்த்,
உங்க மகள்தான் பள்ளியிலேயே முதல் மாணவி அதிலும் குறிப்பாக தமிழ்,கணக்கு,
இயற்பியலென மூன்று பாடத்திலும் இருநூறு மதிப்பெண்கள் உங்க மகளை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர் மாணவிகள் இவ்வளவு நேரம் அதை பார்த்துவிட்டுத் தான் வருகிறேன் என கூறியதைக் கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள் தமிழரசி
அழாதிங்க ஆன்டி உங்க கவலையெல்லாம் தீந்திருச்சு நல்ல நிலைமைக்கு வருவா உங்க மகள் வாங்க போய் அந்த விழாக்கோளத்தை பார்த்து உங்கள் தமிழினியை வாழ்த்தி கூட்டி வரலாம் என இருவரும் பள்ளி நோக்கி புறப்பட்டனர்...
-காவியமாவாள்

எழுதியவர் : கிருபானந்த் (3-May-15, 9:15 pm)
பார்வை : 236

மேலே