அம்மா அப்பா விளையாட்டு
நம்ம வீட்டுப் பானைக்குள்ளே
அரிசி கொஞ்ம் தான் எடுத்து
குஞ்சி முட்டி பானைக்குள்ளே
சோறாக்கி தின்றிடலாம்
குதூகலமா விளையாடிடலாம்
கும்மாளம் போட்டிடலாம்
ஊரெல்லை ஆற்றினிலே
மரக் கட்டை ஓடமாக்கி
எல்லோரும் ஒன்றாய் ஏறி
ஏலேலோ பாட்டுப்பாடி
மட்டையதை துடுப்பாக்கி
நனைந்தே குளித்திடலாம்
கண்கள் பொத்தி பொருள் ஔித்து
மறைந்திருந்து அதைப் பார்த்து
களித்தே சிரித்து மகிழ்ந்து
கள்ளம் இல்லா அம்மா அப்பா
விளையாட்டும் விளையாடி
வாழ்க்கைப் பாடம் கற்றிடலாம்
வாருங்கள் தோழர்களே
விடுமுறைதான் இன்றெமக்கு
சுதந்திரமாய் கதைத்துப் பேச
வாய்ப்பான இந்த நாளை
என்றும் மறவா நாளாய்
மாற்றிடலாம் மனமகிழ்ந்திடலாம்!!

