இதுதான் வாழ்க்கையா

இதுதான் வாழ்க்கையா...!

கனவுகள் கனமாய் கனக்க
நினைவுகள் நெஞ்சை பிளக்க
கண்கள் கண்ணீரை மறைக்க
உதடு மட்டும் சிரிக்க...

நிலையான தொழிலில்லை சிரிக்க
நிம்மதியான தூக்கமில்லை மறக்க
உணவுண்டு பசிஇல்லை பிழைக்க
மௌனமாய் நான்மட்டும் புலம்ப...

சொந்தங்களிருந்தும் பேச மனமில்லை
கவலைகளிருந்தும் கண்ணீருக்கு இடமில்லை
மூளை இருந்தும் பயன்படுத்த தெரியவில்லை
உள்ளதை சொன்னால் நம்ப யாருமில்லை...

இதுதான் வாழ்க்கையா...?

எழுதியவர் : கறுப்பன் (4-May-15, 3:30 am)
பார்வை : 104

மேலே