நிலா - நாகூர் கவி
நீல வானின்
நெற்றியில்
வெள்ளை மச்சம்...
வான் மைதானத்தில்
தனியாய் மிதக்கும்
வெண் பந்து...
நீல் ஆம்ஸ்ட்ராங்கின்
அறிவைத் திறந்த
அற்புத ஆசான்...
தனிமையை
விரும்பும்
கைம்பெண்...
பூமியில் பூத்த
பூச்செடிகளின்
பூச்சாண்டி...
கவிதை தரும்
கவிஞனின்
காதலி...
இருபத்து மூன்று
டிகிரியில்
பூமியை சாய்க்கும்...
அம்மாவின் அழைப்பிற்கு
செவிகொடுத்து பசியாற்றும்
அவளது சேய்க்கும்...
நபிகளாரின் விரலாணைக் கண்டு
நெஞ்சைப் பிளந்து
தன் ஈமானைக் காட்டியது நிலா...!