கடவுள் இருக்கிறார்
சரியாக ஒரு வருடத்திற்க்கு முன்பு இதே நேரத்தில்
திருச்சி ஜங்ஷன் நேரம் இரவு பதினொன்னை நெருங்கிவிட்டது
இனி அடுத்த பஸ் பிடித்து வீட்டுக்கு செல்ல நள்ளிரவு ஆகிவிடும்
எங்களுக்கு நல்ல பசி...
பக்கத்தில் இருக்கும் உணவகத்தில் நுழைந்து விட்டோம் நாங்கள்தான்
கடைசிபோலும்... எதுவுமே இல்லை... இருப்பதை எடுத்து வரச்சொல்லிவிட்டோம்...
என் சிறிய மகளுக்கு நல்ல பசி எனக்கு இட்லிதான் வேண்டும் என்று
பயங்கர பிடிவாதம் ஒரே அழுகை..
எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை... இட்லி இல்லை
சீக்கிரமே தீர்ந்துவிட்டதாக சொன்னார்கள் பக்கத்திலும்
எந்தக்கடைகளும் இல்லை வரும்போதே பார்த்துக்கொண்டுதான்
வந்தோம் இவள் அழுவதை பார்த்துக்கொண்டு இருந்த பக்கத்தில்
இருந்த பெரியவர் அவருக்கு வைத்திருந்த இரண்டு இட்லியை
இவளுக்கு கொடுக்க குழந்தை முகத்தில் அவ்வளவு சந்தோஷம்
அந்த நிமிடம் அவரே எங்களுக்கு கடவுளாக தெரிந்தார்...