ஏன் என்று சொல்வாயா

சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே - நீங்கள்
சுற்றும் உலகில் சுதந்திர சுவாசம் பெற்றீரா.?
சுடுகிற அடுப்பில் துணையாய் வீட்டில் சமைத்தீரே-நீங்கள்
சுத்தகல்வி சுடராய் பெற்றும் தெளிந்தீரா.?
சுற்றிய கொடுமை முற்றும் களைந்து வந்தீரா.?
சுதந்திரம் சொல்லி சூறாவளியாய் எழுந்தது ஏன்..?

பணிக்கு சென்றால் பிணிகள் தீரும் என்றீரே
பலபணிக்கு சென்று பணமும் நிறைய சேர்த்தீரே
இனிதாய் இல்லறம் என்றும் வாழ துடித்தீரே
இருகைகளில் வாழ்வை இறுகபிடித்து நடந்தீரே..!
இருந்தும் கொடுமை முற்றும் துறந்து சிரித்தீரோ..?
சுதந்திரம் சொல்லி சூறாவளியாய் எழுந்தது ஏன்..?

மனதில்உறுதி உதிக்க வேண்டும் கொதித்தீரே
மங்கைவீரம் விண்ணை தொட்டு சொன்னீரே..!
மகளிர் காவல் ராணுவம் எல்லாம் நிறைத்தீரே
மண்ணில் வாகனம் மடியில்லாமல் பிடித்தீரே..!
பயணம் தனிமை அச்சம் விட்டு சென்றீரோ..?
நீங்கள் சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே..!

வாழ்க்கை துணையை தேர்வு செய்வேன் என்றீரே
வாழ்த்து சொன்ன வாய்கள் போற்ற வாழ்ந்தீரா ..?
பிடித்தவனோடு தனி குடித்தனமாய் வசித்தீரே
பிடித்தவன் துறந்து மடியில் கனமாய் அழுதீரே..!
பின் உயிரை மாய்க்க எமனைதேடி அலைந்தீரோ..?
சுதந்திரம் சொல்லி சூறாவளியாய் எழுந்தது ஏன்..?

ஆடை குறைத்து அழகை கூட்டி நடந்தீரே
ஆண்கள் கொடுமை சட்ட கட்டி போட்டீரே
ஆட்சி கட்சி இரண்டும் கையில் பெற்றீரே
அதிசய திட்டம் சாதனை எதுவும் வகுத்தீரோ..?
அற்புதம் என்று சரித்திரம் சொல்ல செய்தீரோ..?.
சுதந்திரம் சொல்லி சூறாவளியாய் எழுந்தது ஏன்..?

பெண்ணும் ஆணும் உரிமை சமமாய் கேட்டீரே
பெற்றதும் கவலை துறந்து வாழ்வில் இணைந்தீரே
தமிழகம் டெல்லி பஞ்சாப் எங்கும் கொடுமைகள்
தலைப்பு செய்தியில் தினமும் காலையில் படித்தீரோ- உங்கள்
கைகள் அவிழ்த்தும் கொடுமைகள் தொடருது கண்டீரே..!
இந்த கொடுமை தொடரும் குற்றம் ஏனோ சொல்வீரோ..?


குறிப்பு: பெண்கள் புதுமைபெண்ணாய்மாறி சுதந்திரமாக செயல்பட்டால் பெண்கொடுமை ஒழியும் என்றோமே..!
இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறியும் பெண் கொடுமை குறையாமல் அதிகரித்து விட்டதே..! அதை எண்ணியதன் விளைவே இந்த பதிவு..!

எழுதியவர் : குமரி பையன் (7-May-15, 11:01 am)
Tanglish : aen enru solvaayaa
பார்வை : 760

மேலே