சந்தேகம்
தொட்டதெல்லாம் சந்தேகம் என்றால்
நீ உன்னை நம்ப வில்லை
அடுத்தவனைப் பார்த்ததும்
இவன் இப்படித்தான் என்று
உறுதி செய்வதும் உன் சந்தேகம்
சந்தேகம் பொல்லாதது,
உன் மனதை குடைந்து கொண்டே செல்லும்
உன் மனதின் சந்தேகத்தை தூக்கி எறிந்து விடு
மனம் இலேசாகி விடும்
நீ விழித்துக் கொள்வாய்
உன்னை நீயே சமாதானம் செய்து கொள்
சந்தேகம் என்ற கொடிய வியாதியை வேருடன் பிடுங்கி ஏறி
நிம்மதி இன்றி மனிதன் அலைவதற்கு
முதற் காரணம் சந்தேகம்
அற்ப சந்தேகம் மனதில் புகுந்து விட்டால்
அதுவே உன்னையும் சுற்றி உள்ளவர்களையும்
ஆட்டிப் படைத்து விடும்
எது வந்தாலும் சரி செய்து விடலாம்
சந்தேகம் வந்து விட்டால்
உன்னைத் தொடர்ந்தே கொன்று விடும்
வாழ்வில் ஆழமுள்ள நம்பிக்கை வை
அன்புக்கு மட்டும் இடம் கொடு
சந்தேகம் மனதை எட்டியும் பாராது
உன் மீதும் அடுத்தவர் மீதும் நம்பிக்கை வை,
உன்னால் எந்தப் பிரச்சினையும்
இலகுவில் சமாளிக்க முடியும்
புரிந்து கொள்ள முடியும்
அன்பை மட்டும் உனக்காக வைத்துக் கொள்
எல்லாம் அதன் வழியே, அன்பே கடவுள் .