பெற்றோர் வேதனை

பெற்றோர் வேதனை...........

எனக்கு தள்ளிப்போன அந்நாள்
உன் வருகையை உறுதிசெய்த பொன்நாள்..!

உனக்கான எங்கள் கனவுகளை
இதய பெட்டிக்குள் நிரைத்துவைத்திருந்தோம்...!

நீ இப்பூவுகில் ஜனித்த நாள்
வார்த்தைகள் இல்லை அவ்வின்பத்தை வரையறுக்க..!

அன்று முதல் உன் ஆசை எங்களுடையதாய் மாற்றிக்கொண்டோம்..
உன் கனவை எங்கள் நினைவுகளாய் ஏற்றுக்கொண்டோம்...!

நீ சிரித்த முதல் சிரிப்பு
நீ கொடுத்த முதல் முத்தம் என
நீ செய்த முதல் செயல் யாவும்
எங்களின் பொக்கிஷமாய் பொதிந்துகிடக்கிறது எங்களுக்குள்...!

இரவு பகல் பார்த்ததில்லை
பாசத்தில் குறைவைத்ததில்லை...!

பட்டினியாய் கிடந்திருக்கிறோம் என்றும்
உன்னை பட்டினியாய் விட்டதில்லை...!

முடிச்சுவச்ச ஒத்த ரூபாயக்கூட மிச்சம் வைக்காம
கொடுத்திருக்கே உன் படிப்பிற்க்கு....!

கை பிடித்து நடந்த நீ காளையனாக
கன்னி ஒருவள் கைபிடித்துத் தர
எங்கள் கைகளை ஒதரிவிட்டு சென்றாய்....!!

அவள் ஒருவள் மட்டுமே உலகம் என்றாய்
இவ்வுலகை காட்டிய எங்களிடம்....!

முதுமை எங்களை பற்றிக்கொள்ள
முடியாமை எங்களை ஏளனம் செய்ய.....!

ஒரு வேலை சோற்றுக்கும்
சொர்ப்ப ஆசைக்கும் வழியில்லாமல் நாங்கள்....!

எங்கள் இளமையின் உழைப்பில் சேர்த்துவைத்த சொத்து நீ
இன்று எங்களுக்கு உரிமை இல்லை எங்கிறாய்...!

வலிக்காது என தெரியாமல் உதைத்தாய் உன் பிஞ்சு விரல்களாள்
நான் அழுவதாய் நடித்தேன்...!

வலிக்கும் என் தெரிந்தே உதைக்கிறாய் இன்று
உண்மையிலேயே நான் அழுகிறேன் நடிக்கிறேன் என்கிறாய்...!

முதுமையில் பிடி சோறு போடுவாய் என நினைத்தோம்
தள்ளாடும் நிலையிலும் எழுந்து நிற்க்க கைகளைக்கூட தர மறுக்கிறாய்....!

உன் முகத்தில் வெளிச்சத்தை மட்டுமே பார்த்த நாங்கள்
வாட்டத்தை பார்க்க மனமில்லை.....!

பெற்றோரை கைவிட்ட பிள்ளை எனும் பேரு உனக்கு வேண்டாம்...

புறம்தள்ளிவிட்டாய் புண்பட்ட மனதுடன் புறப்படுகிறோம்...

அங்கே நல்ல மனிதன் ஒருவர் கட்டியிருக்கிறார்
முதியோர் இல்லம் எனும் கூடு அந்த கூட்டின் வாயில் திறந்திருக்கும் எங்களுக்காக...!!

மகனே எங்களின் கடைசீ ஆசை
நாங்கள் இறந்ததாய்செய்தி வந்தாள்
ஒரு சொட்டு கண்ணீர் விடவேண்டாம்
அடக்கம் செய்ய மகனாகவாவது வருவாயா......???

ரேவதி...........

எழுதியவர் : ரேவதி (8-May-15, 12:19 pm)
Tanglish : petror vethanai
பார்வை : 106

மேலே