படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - கவிதை தலைப்பு - அனாதை

அனாதை....
*****************

அழகிய ஆடையில்லை
அணிந்துகொள்ள ஆபரணமும் இல்லை....!

நடைபழகுகயில் என் முதல் பெயர்
பிறக்கயிலே பெத்தவங்கள விழுங்கிய "சனியன்"...

யாதுமரியா வயதில் வீதியில் செல்கையில்
எனக்கான அடையாளம் "அனாதை"....

பருவமெய்தி இன்று அதே வீதியில் போகயில்
ஆண்களின் உதடுகள் உச்சரிக்கிறது "தேவதை"...

பெண்களின் உதடுகள் உச்சரிக்கிறது
யார்குடியை கெடுக்கப்போகிறாளோ.....

இழுத்து போர்த்தியே சென்றாலும்
கழுகாய் சுற்றும் இளமைகளின் பார்வை
குத்தி கிழித்து கொத்தி செல்ல எத்தனிக்கிறது.....

எனது எதார்த்த பார்வைக்குக்கூட
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் சமுதாயமே....

என்ன பேசினாலும்
யார் கேட்டுவிடப்போகிறார்கள் என்ற எண்ணமோ...?

என் கண்ணீர் துடைக்க உங்கள்
கரம் கொடுக்கவேண்டாம்
அனாதைகளுக்கும் மானமும் மனமும்
இருக்கிறது என்பதற்க்கு
அங்கீகாரம் கொடுங்கள் அது போதும்.....

ரேவதி.....

எழுதியவர் : ரேவதி (8-May-15, 2:15 pm)
பார்வை : 353

மேலே