நரைத்துவிட்ட காதல்
உன் வாசத்திற்க்குள்ளும்
சுவாசத்திற்க்குள்ளும்
முடங்கிக் கிடக்கிறேன் ;
உன் கரிசனப் பார்வையும்
கர்ஜனைக் காதலும்தான்
என் கருவறை ;
உள்ளம் சொல்வதை
ஏனோ என் எழுதுகோல்
எழுத மறந்து
அல்லது மறுத்து விடுகிறது
உருவாகாத கருவாக
என் கவிதையும்
உருகி முடிந்த மெழுகாக
என் காதலும்.

