பூவுக்குள் பூகம்பம்

ஓர் நாள் பூகம்பம்,
பூ கம்பம்
சாய்ந்தது.

நேற்றுவரை
பூகோளத்தின்
ஓர் பகுதி.
அலங்கோலமாய்.

உறவினர் சூழ
ஓடி திரிந்த,
எம் மண்.
எமனாகி,
ஏப்பம் விட்டது
ஏன்.

சிறுவயதில்
உன்னை தின்றதால்
வந்த கோபமா?
இயற்க்கை வளத்தை
வெட்டியதால்
வந்த வேகமா?

அன்று,
மயானம்
ஊர் கோடியில்.
இன்று,
ஊரே மயானம்.


ஊர் எங்கே?
தனிமையில்
நான் இங்கே.

வானம் பார்த்து
உயர்ந்து இருந்தோம்
இன்று
வையகம்
காக்க
வேண்டுகிறோம்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (9-May-15, 4:27 pm)
பார்வை : 133

மேலே