படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் -போட்டிக்

ஆற்றின் கரையினிலே
இள மரத்தின் அடியினிலே
வாத்தியம் தான் மடியினிலே
யாருக்கென்று காக்கையிலே
நீயே ஒரு பெண் மயிலே
உனக்கேன் மெல்லிய தந்தியிலே
கூட்டும் இசை பண்ணினிலே
ஒலிக்கும் துல்லிய ராகங்களே
நேர்த்தியான கைகளிலே
சிக்க தவிக்கும் எண்ணத்திலே
பாவை எந்தன் நெஞ்சத்திலே
காதல் கனலின் மூட்டத்திலே
பொசுக்கி தகிக்கும் வேளையிலே
மயக்கும் அம்பின் பார்வையிலே
குளிரும் பனியும் நிலவு போலே
சுழற்றி வீசும் வீச்சினிலே
என்னை தண்மை நதியினிலே
தள்ளி விட்டாய் ஆசையிலே
நீந்தி வருவேன் உவகையிலே
உன்னை அடையும் எழுச்சியிலே