எங்கும் நம்பிக்கை எதிலும் நம்பிக்கை

நம்பிக்கை ! நம்பிக்கை ! நம்பிக்கை !
எங்கும் நம்பிக்கை ! எதிலும் நம்பிக்கை !
காந்தி அவர்கள் அகிம்சை - மீது
வைத்தது நம்பிக்கை - என்
அருமை தாய் வேலு நாட்சியா - நம்
தமிழ் மண்ணை காக்க - தன்
வீரத்தின் மீது வைத்தது நம்பிக்கை !
அன்பு என்னும் சொல்லின் - மறு
வார்த்தையான காதலின் முதற்படி நம்பிக்கை !
ஓவ்வொரு பெண்ணும் கருத்தரித்து -தன்
பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் - என்றால்
அதற்கும் வேண்டும் நம்பிக்கை !
ஒரு மனிதன் வாழ்க்கை என்னும் கடலில் - உடல்
என்னும் கப்பலில் பல இன்னல்களை - கடந்து
பயணம் செய்ய வேண்டும் - என்றால்
அதற்கும் வேண்டும் நம்பிக்கை ! - மொத்தத்தில்
ஒரு மனிதனின் தும்பிக்கை தான் நம்பிக்கை !


கடைசியாக ஒன்று கூறுகிறேன் நம்பிக்கையை ஒரு சில வரிகளில் அடக்க முடியாது.....
என் என்றால் இந்த பூமி நிற்காமல் சுழல்கிறது என்றால் அதுவும் ஒரு நம்பிக்கை தான் ...!

எழுதியவர் : ர.கீர்த்தனா (9-May-15, 4:53 pm)
பார்வை : 405

மேலே