படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - இன்னும் வரவில்லையா நீ

இன்னும் வரவில்லையா நீ!
நான் உனக்காக எழுதிய பாடல்
நீ அவ்வப்போது செய்த ஊடல்
தேடித் தேய்ந்த என் கால்கள்
வறண்டு போன என் இதழ்கள்
உன் வாசம் போகாத என் ஆடை
ஊற்றெடுக்கும் என் ஆசை ஓடை
உன் வழியில் இன்னும் என் கண்கள்
என்னைச் சுற்றி கேட்கும் உன் பண்கள்
என அனைத்தும் சொல்கின்றன
காத்திருத்தலும் சுகமே காதலுக்காய்…
இன்னும் வரவில்லையா நீ..!