படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டி கவிதை - தொடுவேனா என் தொடுவானை

நினைவுகளை தந்துவிட்டு
நீயெங்கே சென்று விட்டாய்...
கனவு பல கண்டுவிட்டு
காலமெலாம் தவிக்கின்றேன்.

நெய் ஊற்றி தீபமேற்றி
நேற்றுவரை பார்த்துவிட்டு
காற்று மழை வந்தபோது
கைகழுவி விட்டவனே....

நீ விட்டுப் பொனதிலென்
மனம் கெட்டுப் போனதடா...
உயிர் விட்டுப் போவதுபோல்
துயர் தொட்டுப் போகுதடா...

நீ தொட்டுத்தந்த வழியை விட
விட்டுச்சென்ற வலியின் வீரியம் அதிகம்
இது நிதர்சனம்
என்றுவரும் உன் நிஜ தரிசனம்.

திரும்பிய திசையெங்கும்
உன் திருமுகமே தோனுதடா..
அன்பு தொலைந்த அரைநொடி வாழ்விலும்
அக்கறை இன்றிப் போகுதடா...

என் விருப்பம் தெரிந்தவனே
நான் விரும்பித் தொலைக்கவில்லை.
விரைந்து வருவாயா...
விலகிப் போவாயா ஒரு தொடு வானமாய்.....
.

எழுதியவர் : parkavi (10-May-15, 12:21 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 111

மேலே