படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - கனவன்
சுழலும் உலகமோ
சூரியனை சுற்றி.
என் உலகமோ
உன் நினைவுகளை சுற்றி...
என் காதலோ
உன் மீது
உன் காதலோ
தேசத்தின் மீது
முக்கோண காதலாய்
நம் காதல்...
கண்ணம் உரசி
இதழ் கடித்த நொடி
கனவுகளாய்
என் இமைக்குள்...
தேசத்தின் காதல்
இறவாமல்
கல்லறைக்குள் நீ...
உன் நினைவுகளோடும்
கனவுகளோடும்
கைம் பெண்ணாய் நான்...